பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

நிலத்தில் தொங்கும் மின் வயர்களை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கமுதி அருகே துண்டிக்கப்பட்ட மின் வயர்களை அகற்றாததால், விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 8:19 pm

கமுதி அருகே துண்டிக்கப்பட்ட மின் வயர்களை அகற்றாததால், விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.
     கமுதி அடுத்துள்ள பேரையூர்-- முதுகுளத்தூர் செல்லும் சாலையோரத்தில் அய்யனார்புரம் அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் பயன்படுத்த, முதுகுளத்தூருக்குச் செல்லும் மின் வழித்தடத்தில் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 8 ஆண்டுகளாக பருவமழை இல்லாததால், நீரூற்றுக்கள் குறைந்து, ஆழ்துளைக் கிணறுகளும் அழிந்துவிட்டன. இதனால் விவசாய தேவைக்காக மின்சாரம் பயன்படுத்துவது குறைந்துள்ளது.
    எனவே, இதற்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள மின் கம்பங்களில் மின் வயர்கள் தரையை ஒட்டி தொங்குகிறது. இதனால், மின்சாரம் விநியோகிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். 
    மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.