மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பாதுகாப்பு கோரி காதல் ஜோடி ராமநாதபுரம் எஸ்.பி. யிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கண்டுகொள்ளான் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, மாவட்டக்

Updated On :22 அக்டோபர் 2018, 8:17 pm

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கண்டுகொள்ளான் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து பாதுகாப்பு கோரி  திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     கண்டுகொள்ளான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (28). மீனவரான இவரும், அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கரி (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிவசங்கரி தொண்டியில் உள்ள மாலை நேரக் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
    இந்நிலையில், இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 18 ஆம் தேதி கிராமத்திலிருந்து புறப்பட்டு  ராமநாதபுரம் வந்துள்ளனர். பின்னர், திங்கள்கிழமை திருநெல்வேலி வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டு பதிவுச் சான்றிதழுடன், அன்று மாலை ராமநாதபுரம்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.