ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மகன்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு ஆட்சியரிடம் வயதான தம்பதி மனு

மிகவும் கஷ்டப்படுவதால், எங்கள் குழந்தைகள் 7 பேருக்கும் எழுதிக் கொடுத்த ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை

Updated On :22 அக்டோபர் 2018, 8:24 pm

மிகவும் கஷ்டப்படுவதால், எங்கள் குழந்தைகள் 7 பேருக்கும் எழுதிக் கொடுத்த ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வயதான தம்பதி மனு அளித்தனர். 
     ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த அமீர் முகைதீன் (70) மற்றும் இவரது மனைவி சீனி செய்யது (60) வந்திருந்தனர். அமீர் மைதீனால் நடக்க இயலாது என்பதால், அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவி சீனி செய்யது அழைத்து  வந்திருந்தார்.
    இவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
    எங்களுக்கு ராமநாதபுரத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருந்தது. அதை, எங்களது 6 மகன்கள், ஒரு மகள் என 7 பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். இந்நிலையில், எங்களை ஒரேயொரு மகன் மட்டும் ஓரளவுக்கு பார்த்துக் கொள்கிறார்.
     மற்ற 6 பேரும் வயதான எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. மருத்துவ சிகிச்சை கூட பெறமுடியாத அளவுக்கு கஷ்டப்படுகிறோம்.  மகன்களில் ஒருவர், எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். சில சமயங்களில் தாக்குதலும் நடத்துகிறார்.
    எனவே, மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்பதாலும், வசதியற்ற நிலையில் உள்ளதாலும், நாங்கள் 7 பேருக்கும் பிரித்துக் கொடுத்த சொத்தை எங்களுக்கு திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
    இம் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலரையும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரையும் அத்தம்பதியர் வீட்டுக்கு சென்று விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.