திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே மணிமுத்தாறு பாலம் உள்ளது. தொண்டி, மதுரை, திருச்சி, ராமேசுவரம், ஓரியூர், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்தாண்டு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி இருப்பதால், இந்தப் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மண் அரிப்பை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

