ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம்..! டைட்டில் டீசர் ரிலீஸ்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் குறித்து...

The poster for the film ‘Parimala & Co.’

‘பரிமளா & கோ’ படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பாண்டிராஜ்.

Published On :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

லைகா, தமிழ்க்குமரன், பசங்க புரொடக்‌ஷனில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பசங்க திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அருள்நிதியின் வம்சம், சிவகார்த்திகேயனின் மெரினா, சிவகார்த்திகேயன் - விமலின் கேடி பில்லா கில்லாடி ரங்கா என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து அசத்திருயிருந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ. 100 கோடி வசூலித்து அசத்தியது.

இந்த நிலையில், தனது புதிய படத்தினை அறிவித்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் டீசர் விடியோ மிகுந்த நகைச்சுவையை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Director pandiraaj next titled Parimala and Co - Title Teaser

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.