தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நிகழாண்டு பருவமழை கை கொடுக்குமா? திருவாடானை விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவாடானை பகுதியில் இந்த ஆண்டாவது பருவமழை கை கொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Published On :

திருவாடானை பகுதியில் இந்த ஆண்டாவது பருவமழை கை கொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மாவட்டத்திலேயே அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாகும். தாலுகாவில் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இந்த தாலுகாவை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கின்றனர்.
நெல் விவசாயத்தில் சிறப்பு பெற்ற இப்பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வறட்சியால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். 
சென்ற ஆண்டு ஏற்பட்ட பயிர் இழப்புக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விவசாய காலம் துவங்கி விட்டது. பல கிராமங்களில் இன்னும் வயல்களை உழவு செய்யாமல் அப்படியே போட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்தால் மட்டுமே நெல் விவசாயம் கைகொடுக்கும். அதற்கு முன்பாக சிறிய அளவில் பெய்யும் மழையைக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து முடித்து விடுவார்கள். ஆகஸ்ட் மாதம் நேரடி நெல் விதைப்பு செய்து முடித்து விடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்து பல நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சிறிதளவிலான மழை கூட பெய்யாததால் நேரடி நெல் விதைப்பு செய்யாமல் பல ஊர்களில் நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இதுகுறித்து திருவாடானை பகுதி விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்திலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தாலுகாவில் முழுக்க நெல் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறோம். பருவமழை கடந்த இரண்டு ஆண்டுகளாக பொய்த்துப் போய்விட்டது. இந்த ஆண்டும் இதுவரை சரியான அளவில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாயத்தின் ஆரம்ப கட்டமான நேரடி நெல் விதைப்பு பணியை கூட செய்ய முடியவில்லை. 
மேலும் கடந்த ஆண்டுக்கு உரிய பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் விதை நெல் வாங்க கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம். எனவே அரசு கூடிய விரைவில் இழப்பீடு வழங்கினால் மட்டுமே இந்த ஆண்டுக்கான விவசாயத்தை 
செய்ய முடியும். இன்னும் சில நாள்களில் மழை பெய்யாவிட்டால் விவசாயிகளின் நிலை மோசமாகிவிடும். இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.