
ராமநாதபுரத்தில் செப்.16-இல் மகாகவி பாரதி விழா
ராமநாதபுரத்தில் வரும் 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாகவி பாரதி விழா நடைபெறுகிறது.
ராமநாதபுரத்தில் வரும் 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாகவி பாரதி விழா நடைபெறுகிறது.
தமிழ்ச்சங்கம் சார்பில் அரவிந்த அரங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு புதுச்சேரி பேராசிரியர் கிருங்கை சேதுபதி தலைமை வகிக்கிறார். தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பாரதி பாட்டரங்கத்துடன் விழா தொடங்குகிறது. மூத்த வழக்குரைஞர் மு.ராமசாமி விழாவை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறார். பாரதி உருவப்படத்தை சங்கத்தின் மகளிர் அணியின் தலைவி டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் திறந்து வைக்கிறார்.
டாக்டர் கமலா ராகுல் கவிதாஞ்சலி வாசிக்கிறார். தத்துவமசி என்ற தலைப்பில் ராம்மோகனும், நல்லதோர் வீணை-பாரதி என்ற தலைப்பில் சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாமும் பேசுகின்றனர். இதனையடுத்து நல்லதோர் வீணை என்ற தலைப்பில் பாரதி பாடிய பாடல்களின் கவியரங்கம், சங்க செயலாளர் பொ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறுகிறது.
நிறைவாக பாரதி விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு சங்கத்தின் சார்பில் சே.நல்லமுத்து நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






