
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற இருந்த 9 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற இருந்த 9 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புதன்கிழமை முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் மாவட்டத்தில் சில இடங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு அதிக வயது வேறுபாடு உள்ள ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பது மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அத்திருமணங்ளை தடுக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் நலக்குழுமம், சமூக நல விரிவாக்க அலுவலக பணியாளர்கள் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர் இணைந்து ஒரே நேரத்தில் இப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 9 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணங்ளை அதிகாரிகள் உரிய நேரத்தில் சென்று தடுத்து நிறுத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறினர்.
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி-ராமநாதபுரம் நகர் கோட்டை மேடு பகுதியில் வசிக்கும் கணபதி மகன் கார்த்திக் (30), ராமநாதபுரம் அருகே பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி- சிவகங்கை மாவட்டம் தே.புதுக்கோட்டை அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கனகராஜ் (27), திருவாடானை தாலுகாவுக்கு உள்பட்ட என்.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி- அதே ஊரைச் சேர்ந்த கலையரசன்(27), தங்கச்சி மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுமி-அதே ஊரைச் சேர்ந்த ரொக்ஸித் மகன் ரெக்ஸின் (26), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி- மண்டபம் அருகே நயினாமரைக்கான் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் ராஜா(31), சிவகங்கை மாவட்டம் நன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி- திருவாடானை தாலுகா பாப்பர் கோட்டை ராமநாதன் மகன் பாலமுருகன்(31), கமுதி மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி- விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டியை சேர்ந்த முனியசாமி மகன் ஜோதிலிங்கம்(35), கடலாடி தாலுகா மேலக்கிடாரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி- முதுகுளத்தூர் தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் திருமுருகன்(33), எஸ்.தரைக்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி- அதே கிராமத்தைச் சேர்ந்த 40 வயது விவசாயி ஆகியோருக்கு நடைபெற இருந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






