வழுதூர் காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் அருகே வழுதூர் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே வழுதூர் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலையில் யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் புறப்பட்டு கோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மதியம் ஆலய வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வழுதூர், தெற்கு காட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






