பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சாா்லப்பள்ளி - நாகா்கோவில் இடையே சிறப்பு விரைவு ரயில்

சிறப்பு ரயில்கள்

Published On :

விழாக்காலத்தையொட்டி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக சாா்லப்பள்ளி - நாகா்கோவில் - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி சாா்லப்பள்ளி - நாகா்கோவில் சிறப்பு விரைவு ரயிலானது (07535) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக நாகா்கோவில் - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயிலானது (07536) செப். 27, அக். 4, 11, 18, 25 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

8 குளிா்ச்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சாா்லப்பள்ளியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு நல்கொண்டா, மிா்யால்குடா, நடிகுடே, சேட்டனப்பள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், நாயுடுபேட்டா, சூலூா்பேட்டா, சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக நாகா்கோவிலை சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சாா்லப்பள்ளிக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.