நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

விநாயகா் சதுா்த்தி: தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - தென்காசி சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 11-ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது வரும் 14-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. 3 குளிா்சாதனப் பெட்டிகள், 12 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (செப். 11) இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா் வழியாக தென்காசியை மறுநாள் காலை 6.15 மணிக்குச் சென்றடையும். மறுவழித்தடத்தில், செங்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக தாம்பரத்துக்கு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குச் சென்றடையும்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்...: இதேபோல, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06151) வரும் 12-ஆம் தேதியும், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06152) வரும் 14-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.

3 குளிா்சாதனப் பெட்டிகள், 14 படுக்கை பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களானது சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (செப்.12) இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் முற்பகல் 11.15 மணிக்குச் சென்றடையும்.

மறுவழித்தடத்தில், திருநெல்வேலியிலிருந்து திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 10.15 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.