
வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் சுயதொழில் செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசினார்.
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் சுயதொழில் செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசினார்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வழிகாட்டுதல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியது:
பெரும்பாலான மாணவர்களிடத்தில் படிக்கும் வயதிலேயே எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனை இருக்கிறது. இத்தகைய மாணவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இது போன்ற கருத்தரங்கின் நோக்கம். மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று போட்டித்
தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு நிர்வாகப் பணிகளில் பொறுப்பேற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றி சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர்வது அவசியமற்றது. வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் சிறிதும் தயக்கம் இல்லாமல் சுயமாக தொழில் தொடங்கலாம். புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு மானியத்தில் பல்வேறு கடன் திட்டங்களும் உள்ளன. எனவே மாணவ,மாணவியர்கள் இக்கருத்தரங்கினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பேசினார்.
கருத்தரங்கில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள்,தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் யு.டேனியல் பிரேம்நாத்,சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.மகுதம்மாள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,கல்லூரி மாணவ,மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வரும் 14 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லூரியிலும்,17 ஆம் தேதி பரமக்குடி அரசு கல்லூரியிலும்,18 ஆம் தேதி முதுகுளத்தூர் அரசு கல்லூரியிலும்,19 ஆம் தேதி திருவாடானை அரசு கலைக்கல்லூரியிலும், 20 ஆம் தேதி கடலாடி அரசு கலைக்கல்லூரியிலும் தொழில் முனைவோர் வழிகாட்டும் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





