குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

இலங்கை கடற்படைக்குப் பயந்து தப்பியபோது படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்குப் பயந்து திரும்பியபோது, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:30 am IST

கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்குப் பயந்து திரும்பியபோது, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
  ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை  500 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். 
அப்போது வேகமாக கரை திரும்ப முயன்ற விசைப் படகுகளில் முனியராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள்  4 மீனவர்களையும் மீட்டு ராமேசுவரம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.