இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

"தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி'

தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:25 am IST

தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான வைகைச்செல்வன் தெரிவித்தார். 
 பரமக்குடியில் அதிமுக சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி குறித்து திமுகவினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் இவைகளெல்லாம் இல்லாத கட்சிதான் திமுக. இந்திராகாந்தியை கடுமையாக எதிர்த்துவிட்டு, பின்னர் அவருடனேயே கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவினர். அக்கட்சியினருக்கு எந்த கொள்கையும் கிடையாது. தமிழ்நாட்டை திமுகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவின் தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 
 மிக விரைவில் இன்னும் சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேரும். அதிமுக கூட்டணி தான் பலமான கூட்டணி. மக்கள் பிரச்னைக்கு அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். 
 அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.