மத்திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சிறப்புக் குழுவினர், ராமநாதபுரம் ஒன்றிய பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன், கடலோர மாவட்டங்களில் பேரிடர்களால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறதா என்பதை அறியும் வகையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ஒன்றியத்தில் 3 நாள்கள் நடத்தப்படும் இந்த ஆய்வு, திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழுவில், மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் ஆய்வுப் பிரிவு மாணவர் செளரவ் திரிபாதி, பேராசிரியர் வினய்குமார், மத்திய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம். ரகுராமன், பேராசிரியர் செளகான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
குழந்தைகள் கல்விக்கு பெற்றோர் ஒத்துழைப்பு, கல்வி கற்பதற்கு உள்ள இடையூறுகள், ஆசிரியர்-பெற்றோர் கழகங்கள் பள்ளி வளர்ச்சியில் காட்டும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வதாக குழுவினர் தெரிவிதனர். புதன்கிழமை ஆய்வு நிறைவுறும் நிலையில், அது குறித்த அறிக்கையானது மத்திய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் அளிக்கப்படும் எனவும், குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


