பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கிடையே பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி மாவட்டக்கல்வி அலுவலர் போ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் எம்.சாதிக்அலி, தலைமையாசிரியர்கள் சேதுராமன், அம்பேத்கர், சங்கரன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, வாத்தியக்கருவிகள் இசைத்தல், நாடகம், நடனம், கதை எழுதுதல், கவிதை புனைதல், திருக்குறள் ஒப்பித்தல், கதை சொல்லுதல் மற்றும் நகைச்சுவை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9,10-ஆம் வகுப்புகள், 11,12-ஆம் வகுப்புகள் என போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் சி.லோகமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


