முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் ஆப்பனூர் அணியினர் முதல் பரிசு பெற்றனர்.
பேரையூரில் அன்னைதெரசா மாணவர் மன்றம், கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து 2 ஆம் ஆண்டாக பகல் - இரவு கபடிப் போட்டியை நடத்தின.
இதில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 34 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் முடிவில் ஆப்பனூர் அரியவள் செவன்ஸ் அணியினர் முதல் பரிசும், சேர்ந்தகோட்டை எஸ்.ஆர்.எம் அணியினர் இரண்டாம் பரிசும், பேரையூர் புயல்செவன்ஸ் அணியினர் மூன்றாம் பரிசும், எட்டிசேரி எம்.எஸ்.ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர்.
இதேபோல் மேலும் 8 அணி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.வெற்றிபெற்ற அணியினருக்கு ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை பேரையூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


