திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ராமநாதபுரம் பள்ளிகளில் சிறப்புக் குழுவினர் ஆய்வு

மத்திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சிறப்புக் குழுவினர், ராமநாதபுரம் ஒன்றிய பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

Updated On :23 ஜனவரி 2019, 8:06 am IST

மத்திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சிறப்புக் குழுவினர், ராமநாதபுரம் ஒன்றிய பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
      மத்திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன், கடலோர மாவட்டங்களில் பேரிடர்களால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறதா என்பதை அறியும் வகையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ஒன்றியத்தில் 3 நாள்கள் நடத்தப்படும் இந்த ஆய்வு,  திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.     ஆய்வுக் குழுவில், மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் ஆய்வுப் பிரிவு மாணவர் செளரவ் திரிபாதி, பேராசிரியர் வினய்குமார், மத்திய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம். ரகுராமன், பேராசிரியர் செளகான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
     குழந்தைகள் கல்விக்கு பெற்றோர் ஒத்துழைப்பு, கல்வி கற்பதற்கு உள்ள இடையூறுகள், ஆசிரியர்-பெற்றோர் கழகங்கள் பள்ளி வளர்ச்சியில் காட்டும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வதாக குழுவினர் தெரிவிதனர். புதன்கிழமை ஆய்வு நிறைவுறும் நிலையில், அது குறித்த அறிக்கையானது மத்திய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் அளிக்கப்படும் எனவும், குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.