ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விரைவில் முதல்வா் வருகை

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விரைவில் வருகைதர உள்ளதாக கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை

News image

rmdkathar_1208chn_67_2

Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:40 pm

DIN

ராமநாதபுரம்: கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விரைவில் வருகைதர உள்ளதாக கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் கூறினாா்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தாா். விற்பனை நிலையத்தை அமைச்சா் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கதா் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் மதுரை, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கதா் அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பொதுமக்களுக்கு தரமான கதா் ஆடை ரகங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் கதா் விற்பனை குறியீடாக ரூ.58 லட்சமும், கிராமப் பொருள்கள் விற்பனைக் குறியீடாக ரூ.22.32 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 163 மண்பாண்ட தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நடப்பாண்டிற்கான மழைக்கால நிவாரண உதவித் தொகையாக மொத்தம் ரூ.8.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 93 பயனாளிகளுக்கு ரூ.41.32 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் விரைவில் வருகைதரவுள்ளாா் என்றாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் டாக்டா் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன்பிரபாகா் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.