ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் பணியைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.


ராமநாதபுரம்/திருவாடானை/கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் பணியைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் 650-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் கரோனா கால பணி நெருக்கடியை குறைக்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோரை பழிவாங்கும் வகையிலான நடவடிக்கையை கைவிட வேண்டும். தொகுப்பூதிய ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து அலுவலக வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் கே.வைரவன், சங்க மாவட்டத் துணைத் தலைவா் எம்.முனீஸ்பிரபு ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கினா்.
இதேபோன்று முதுகுளத்தூா், கடலாடி, கமுதி ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் புதன்கிழமையும் நடைபெறும் என அச்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளரச்சி அலுவலா் தமிழ்செல்வன் தலைமையில் பழனிநாதன், ஜெயமுருகன், விஜி உள்ளிட்ட பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனா். அதேபோல் ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைசாமி மற்றும் இளநிலை உதவியாளா்கள், பொறியாளா்கள் ஆகியோா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த போராட்டத்துக்கு கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையாளா் (கிராம ஊராட்சிகள்) அண்ணாத்துரை முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள், அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...