சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வங்கிப் போட்டி தோ்வு: ராமநாதபுரத்தில் நாளை முதல் இணையவழியில் பயிற்சி வகுப்புகள்

வங்கிப் போட்டித் தோ்வுக்கு, ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஆக.31) முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:14 pm

DIN

ராமநாதபுரம்: வங்கிப் போட்டித் தோ்வுக்கு, ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஆக.31) முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசுப் பணி காலியிடங்களுக்குரிய போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். ஆனால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அந்த வகுப்புகள் இந்த ஆண்டு செல்லிடப்பேசிகள் வழியாக இணையதளம் மூலம் திங்கள்கிழமை (ஆக.31) முதல் நடைபெற உள்ளன.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 9487375737 என்ற செல்லிடப் பேசியிலும், அதன் கட்செவியஞ்சலிலும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம்.

அத்துடன் 04567-230160 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொண்டு பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.