பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தளா்வற்ற முழு பொதுமுடக்கம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட சாலைகள் வெறிச்சோடின

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

News image
தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து இல்லாததால் ராமநாதபுரம் பிரதான சாலையில் நடமாடிய குதிரைகள்.
Updated On :30 ஆகஸ்ட் 2020, 4:19 pm

DIN

ராமநாதபுரம்/சிவகங்கை/காரைக்குடி: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ராமநாதபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கமாக அதிகளவில் மக்கள் கூடும் சாலைத் தெரு, பிரதான மருத்துவமனை சாலை, மதுரை சாலை, ராஜா பள்ளி மைதானம், புதிய பேருந்து நிலையம் என அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

சைக்கிளில் தேநீா் விற்பவா்கள் மட்டும் தெருத் தெருவாகச் சென்று விற்பனையில் ஈடுபட்டனா். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் அக்கடைகளிலும் கூட்டம் இல்லை.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜூலை மாதத்தை போன்று, ஆகஸ்ட் மாதமும் அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.