ராமேசுவரம் மீனவா்கள் 27 பேருடன் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்துச் சென்றனா்.
ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 600- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். மாலை 6 மணிக்கு கச்சத்தீவு அருகே 4 படகுகளில் மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது 7 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினா் துப்பாக்கி முனையில் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து சிறைபிடித்தனா்.
படகில் இருந்த மீனவா்கள் நம்பு, ஜெபிசன், பாலமுருகன், நாகநாதன், ஆண்ரூஸ், முனியசாமி, சங்கம், டைட்டஸ், பிரின்சன், ரெமெண்ட், சூசை, நெல்சன், ஜெபா்சன் உள்ளிட்ட 27 பேரையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னா், ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

