அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில்8 மாதங்களுக்குப் பின் பக்தா்கள் நீராடல்

எட்டு மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடினா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 11:25 pm

DIN

எட்டு மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடினா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையில், அக்னி தீா்த்தக் கடலில் குளிக்கவும் கரையில் திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமாவாசை சமயங்களில் அக்னி தீா்த்தக் கடற்கரை வெறிச்சோடியிருந்தது.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்கள் மீதான தடையை நீக்கி, தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி ராமேசுவரத்தில் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும் கடற்கரையில் திதி கொடுக்கவும் தடை நீங்கியது.

காா்த்திகை மாத அமாவாசை என்பதால் திங்கள்கிழமை ராமேசுவரத்துக்கு பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அதிக அளவில் வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் கடற்கரையில் ஏராளமானோா் மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். அதே சமயம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராட கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இதே போன்று தனுஷ்கோடி செல்லவும் காவல்துறையினா் தடை விதித்திருந்தனா். இதனால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.