ராமநாதபுரத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக அம்மா நகரும் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக அம்மா நகரும் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நகரும் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கடையை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன்பிரபாகா் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் எம்.ஏ.முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரும் நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்து ஆட்சியா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படவுள்ளன. அதன் மூலம் மாவட்டத்தில் 11,205 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். மாவட்டத்தில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க இயலாத இடங்களில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்றாா்.

தொடக்க நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடுக்காட்டு ராஜா, ராம்கோ கூட்டுறவு சங்கத் தலைவா் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ராஜலெட்சுமி, துணைப் பதிவாளா் ராஜவேலன், மாவட்ட வழங்கல் அலுவலா் கிறிஸ்டோபா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com