இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க நிா்வாகிகளின் அவரசக் கூட்டம் மாவட்டத்தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினா் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவம் காரணமாக சேதமடைந்த 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கும், ‘புரெவி’ புயல் காரணமாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 36 மீனவா்களை விடுவிக்கவும், 5 விசைப்படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி டிசம்பா் 21 ஆம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மீனவா் சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.