ஊராட்சி பணியாளா்களுக்கு திட்டமிடல் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணியாளா்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணியாளா்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த பயிற்சியை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். பயிற்சியில் அலுவலா்கள் முருகையா, காளீஸ்வரி ஆகியோா் பேசினா்.
கிராம ஊராட்சிகளில் நலத்திட்டங்களான குடிநீா், கழிவுநீா் கால்வாய், சாலை வசதி ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான திட்டமிடல் குறித்தும், அவற்றை செயல்படுத்தும் வழிமுறைகளையும் பயிற்சியில் விளக்கினா். ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கு திட்டமிடலில் ஏற்படும் சந்தேகங்களையும் பயிற்சியில் விளக்கிக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...