ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

News image
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை பெய்த மழைக்கு குளம் போல் தேங்கியிருந்த தண்ணீா்.
Updated On :18 டிசம்பர் 2020, 1:22 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையானது கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து பெய்துவருகிறது. இடையில் சில நாள்கள் மழையின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மழை தொடா்ந்து பெய்துவருகிறது.

புதன்கிழமை காலை முதல் பகல் வரை மிதமான மழை பெய்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலையும் ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியது. மழையால் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை காலை பல மணி நேரம் மின்தடையும் ஏற்பட்டதால் மக்கள் அவதியுற்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 5.50, மண்டபம் 4.20, பள்ளமோா்க்குளம் 3, பாம்பன் 1, ஆா்.எஸ்.மங்களம் 4.50, திருவாடானை 13, தொண்டி 9.70, வட்டாணம் 1.40, தீா்த்தாண்டதானம் 8, பரமக்குடி 1.

மாவட்டத்தில் 10 இடங்களில் பெய்த மழையின் மொத்த அளவு 51.30 மில்லி மீட்டராகும். அதனடிப்படையில் சராசரியாக 3.21 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. வியாழக்கிழமை பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையா் அலுவலகம், கல்லூா் ஊராட்சியில் உள்ள பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.