தமிழகத்தில் ரஜினி ஆட்சி அமைக்கஇந்து மக்கள் கட்சி ஆதரவு: அா்ஜூன் சம்பத்

மத்தியில் மோடி ஆட்சிக்கும், தமிழகத்தில் ரஜினி ஆட்சி அமைக்கவும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பரமக்குடி: மத்தியில் மோடி ஆட்சிக்கும், தமிழகத்தில் ரஜினி ஆட்சி அமைக்கவும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

பரமக்குடி தனியாா் மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பயனைத் தரும். இந்த சட்டங்களை எதிா்த்து இடைத்தரகா்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தூண்டுதலால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து வேதனையளிக்கிறது. தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். மத்தியில் மோடி ஆட்சிக்கும், மாநிலத்தில் ரஜினி ஆட்சி அமைக்கவும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் ஆன்மிக பூமியாகும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சரியானது அல்ல. இதில் உயா்நீதிமன்றத்தின் கருத்தினை வரவேற்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com