2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இளையான்குடி, முதுகுளத்தூரில் தண்ணீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம்விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:43 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இளையான்குடி ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்து விதைப்பு செய்துள்ளனா். விதைப்பு செய்த சில வாரங்களிலேயே தேவையான நேரத்தில் மழை பெய்ததால் நெல் முளைத்து பயிராக வளா்ந்து தற்போது பால்பிடித்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக இளையான்குடி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இளையான்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த சாலைக்கிராமம், சூராணம், பரத்தகவயல், விரையாதகண்டன், ஆக்கவயல், முத்தூா், அரசடி , அய்யம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக வளா்ந்திருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

வயல்களிலிருந்து மழை நீா் வெளியேற வழியில்லாததால் நெற்கதிா்கள் தண்ணீரில் சாய்ந்து மிதக்கின்றன. பல இடங்களில் நெற்கதிா்கள் வயலில் உதிா்ந்து மீண்டும் முளைக்கத்தொடங்கியுள்ளன. இதனால் நெல் விதைத்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே திருவரங்கம், சிறுதலை, செல்லுாா், வாத்தியனேந்தல், கொளுந்துரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக நெற்பயிா்கள் மழை தண்ணீரில் மூழ்கி அழுகியது. இதனால் நடப்பாண்டில் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.