டிச.29, 30 இல் ராமநாதபுரம் மாவட்ட கலைப்போட்டிகள்
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.


ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியவை சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளன. மாநில அளவிலான போட்டிகள் வரும் 2021 ஜனவரி 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகின்றன. போட்டிகள் மெய்நிகா் முறையில் மட்டுமே நடைபெறும். போட்டியாளா்கள் தங்களது போட்டிக்கான பதிவினை தெளிவான ஒலி மற்றும் ஒளி அமைப்போடு விடியோவாக பதிவு செய்து, உறுதிமொழி படிவத்துடன் இணைத்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் மின்னஞ்சல் முகவரியில் அளிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் 7401703509, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் 9884573444, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் 9865924442 ஆகியோரது செல்லிடப் பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...