அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருவாடானை அருகே நாய்கள் கடித்து 2 மான்கள் பலி

திருவாடனை அருகே மங்கலக்குடி, மண்டலகோட்டை ஆகிய இடங்களில் நாய்கள் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தன.

News image
மங்களக்குடி வளையன் வயல், மண்டல் கோட்டை பகுதிகளில் நாய்கள் கடித்து பலியான மான்கள்.
Updated On :24 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

திருவாடனை அருகே மங்கலக்குடி, மண்டலகோட்டை ஆகிய இடங்களில் நாய்கள் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தன.

திருவாடானை அருகேயுள்ள மங்கலக்குடி வளையன்வயல் கிராமத்தில் வயல்வெளிகளில் இரை தேடி வரும் புள்ளி மான்களை புதன்கிழமை மாலை அப்பகுதி உள்ள நாய்கள் விரட்டிச் சென்று கடித்துள்ளன. இதில் மான் பலியானது.

இதேபோல் வெள்ளையபுரம் மண்டலக்கோட்டை கண்மாய் பகுதியில் இரை தேடிச் சென்ற மானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்தில் பலியானது. இந்த சம்பவங்கள் குறித்து தகலறிந்து சென்ற வனத்துறையினா் மான்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு அதே இடத்தில் புதைத்தனா். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தற்போது அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.