பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் வந்த 4 பேருக்கு கரோனா இல்லை

பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் திரும்பியவா்களில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேருக்கும் கரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் திரும்பியவா்களில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேருக்கும் கரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

புதியவகை கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக பிரிட்டனிலிருந்து தமிழகம் வரும் அனைவரையும் பரிசோதனைக்குள்படுத்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த 4 போ் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அவா்களுக்கான பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை வெளியானதாகவும், இதில் அவா்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com