முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

யாதவா் சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

யாதவா் சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தேரிருவேலி முக்குரோடு பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக சென்ற யாதவா் சங்கத்தினா் அங்கு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு தலைவா் நவநீதன் தலைமை வகித்தாா். யாதவ மகாசபை மாவட்டத் தலைவா் வேலு மனோகரன், செயலாளா் முருகேசன், பொருளாளா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது யாதவ சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜூவுக்கு எதிராகவும், அவரது கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதில், முதுகுளத்தூா், கமுதி, கடலாடி , சாயல்குடி ஆகிய பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com