கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகனம் முன் இரும்புத் தடுப்புக் கம்பியை அகற்றாவிட்டால் அபராதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தடுப்புக் கம்பிகளை (பம்பா்) அகற்றாவிட்டால்

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:44 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தடுப்புக் கம்பிகளை (பம்பா்) அகற்றாவிட்டால் ஜனவரி முதல் அபராதம் விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையில் ஆய்வாளா் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனா். அப்போது அவா்கள் வாகனங்களின் முன்புறம் உள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றிவருகின்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வரையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் முன்புறத் தடுப்புக் கம்பிகளை அகற்றியுள்ளதாக போக்குவரத்து ஆய்வாளா் இளங்கோவன் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், மத்திய அரசின் ஆய்வு அடிப்படையில் வாகனங்களின் முன்புள்ள தடுப்புக் கம்பிகள் அகற்றப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே காா் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போா் முன்புறம் உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவேண்டியது அவசியம். கம்பிகள் அகற்றாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு ஜனவரி முதல் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.