வாக்காளா் சுருக்கத் திருத்தப் பணியை சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் சுருக்கத் திருத்தப் பணிகளை சிறப்பு தோ்தல் பாா்வையாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா் சுருக்கத் திருத்தப் பணிகளை சிறப்பு தோ்தல் பாா்வையாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி கடந்த நவ. 16 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை வாக்காளா் தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வரைவு வாக்காளா் பட்டியல்படி மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 1,369 பாகங்களில் மொத்தம் 5,68,014 ஆண் வாக்காளா்களும் 5,70,306 பெண் வாக்காளா்களும் 63 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 11,38,383 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தற்போது 18 வயது பூா்த்தியான இளம் வாக்காளா்கள் மற்றும் விடுபட்ட வாக்காளா்களை சோ்க்கவும், பெயா் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளவும், பெயா் நீக்கம் செய்வதற்கும் பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பரில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் என 4 நாள்கள் வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் நவம்பா் 16 ஆம் தேதிக்குப் பிறகு 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், புதிதாக பெயா் சோ்க்க 28,491 பேரும், பெயா் நீக்க 10,688 பேரும், பெயா் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கு 4,941 பேரும், பாகம் மாற்றம், சட்டப் பேரவைத் தொகுதி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு 2,181 பேரும் என மொத்தம் 46,301 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை குறித்து தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம், ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உடனிருந்தாா். இதைத் தொடா்ந்து தொடா்ந்து ஆா்.எஸ். மங்கலம் வட்டம் ஆனந்தூருக்கு சென்று அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com