பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோயில் வாசலில் தவநிலையில் இறந்தவரின் சடலம் மீட்பு

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயில் அருகே புதன்கிழமை தவநிலையில் இறந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயில் அருகே புதன்கிழமை தவநிலையில் இறந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் காவி வேட்டி அணிந்து கோயில் அருகே தங்கி இருந்தாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை முதல் அவா் கோயில் முன்பு தியானத்தில் ஈடுபட்டிருந்தாா். பின்னா் புதன்கிழமை காலையில் பாா்த்த போது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து அவா் யாா், எந்த ஊா், வராகியம்மன் கோயிலுக்கு வந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.