காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2020, 4:34 am

தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் ஏ.டி.எம். மிஸின் வங்கியின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணம் எடுக்கும் வசதியும், பணம் போடும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை கரோனா முழு பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் இன்றி வெளிச்சோடியது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வங்கிக்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

காலையில் பணம் எடுக்க சென்று பொதுமக்கள் ஏ. டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே வங்கி மேலாளர் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.