இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கெதிராக லக்னௌ அணி த்ரில் வெற்றி பெற்றது.
மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஹென்ரிச் க்ளாசன் (62), நிதீஷ் குமார் ரெட்டி (56) அரைசதம் அடித்தார்கள்.
அடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய லக்னௌ அணியில் பேட்ஸ்மென்கள் தேவைப்படும் ரன் - ரேட்டை எளிதில் கடந்து செல்லாமல் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்கள் பார்த்துக்கொண்டனர். இதனால் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. கடைசி ஓவரில் லக்னௌ அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரில் முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டிய ரிஷப் பண்ட் அடுத்த பந்தையும் பௌண்டரிக்கு தட்டி விட்டார். ஆனால், அதற்கடுத்த 2 பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டுத் திடல் விரல் நகத்தைக் கடிக்கும் தருணத்தை அனுபவித்தது.
ஆனால், ஐந்தாவது பந்தில் (19.5) மீண்டுமொரு பௌண்டரி விளாசி லக்னௌ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் கேப்டன் ரிஷப் பண்ட்.
லக்னௌ அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (68*), மார்க்ரம் (45) ரன்கள் திரட்டினர். சிறந்த எகானமியில் பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிய லக்னௌ அணியின் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார்.
Summary
Lucknow Super Giants won by 5 wkts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விராட் கோலி, படிக்கல் அதிரடி அரைசதம்! ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் கோப்பைக்கான போட்டியாளர் கிடையாது: முன்னாள் இந்திய வீரர்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

