சிறப்பாக விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 64 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்பை எட்டுவதற்கு மிகமுக்கியமானதாக பார்க்கப்படும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்ஆர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னௌ அணியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 57 பந்துகளுக்கு 96 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 29 பந்துகளுக்கு 60 ரன்களையும் குவித்தனர்.
ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் லக்னௌ அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களை எடுத்தது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னௌ அணி ஏற்கெனவே, பிளே ஆஃப் தகுதியை இழந்ததும், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 563 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப்பை தக்க வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Playing exceptionally well, the Lucknow Super Giants set a target of 221 runs for the Rajasthan Royals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










