லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 59-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் உள்ள எகானா கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஏமாற்றமளிக்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடைசிப் போட்டியில் ஆட்டநாயகனான உர்வில் பட்டேல் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த கார்த்திக் சர்மாவும் டெவால்ட் பிரேவிஸ் இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
டெவால்டு பிரேவிஸ் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்து அவுட்டாக, நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடிய கார்த்திக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.
42 பந்துகளில் 6 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து ஷெபாஸ் அகமதுவிடம் வீழ்ந்தார்.
அதிரடியாக விளையாட துபே 16 பந்துகளில் 3 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 32 ரன்கள் விளாசியும், பிரசாந்த் வீர் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 23 ரன்கள் கிடைத்தால் சென்னை அணி 180 ரன்களைக் கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. லக்னௌ அணித் தரப்பில் ஆகாஷ் மகராஜ் சிங் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஷெபாஸ் அகமது இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Summary
Pacer Akash Singh returned with figures of 3 for 26 before Kartik Sharma's brilliant batting helped CSK post a competitive total of 187 for 5 against LSG in their IPL 2026 game at the Ekana Cricket Stadium
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
