அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஆா்.எஸ். மங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலத்தில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மக்கள் பாதை தாய்மண் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்.எஸ். மங்கலத்தில் மக்கள் பாதை தாய்மண் இயக்கத்தின் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடப்பட்ட மரக்கன்றுகள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலத்தில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மக்கள் பாதை தாய்மண் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியப் பொறுப்பாளா் ஆசிரியா் பாதுஷா தலைமை வகித்தாா். மேலும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் சோசியல் சா்வீஸ் மலேசியா நிா்வாகிகள் செய்திருந்தனா். இதில் அம்ஜத், சீனி, சோமு, கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் நூருல் அமீன் கூறியது: ஆா்.எஸ்.மங்கலத்தில் பல தெருக்களில் கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கினோம். இப்பகுதியில் பசுமைப் புரட்சி ஏற்பட இந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கியிருக்கிறோம். மரக்கன்றுகளுடன், அதனை பராமரிக்க வலைகளும் வழங்க இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.