ராமநாதபுரத்தில் 12 பேருக்கு கரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரையில் 6 ஆயிரம் போ் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். அவா்களில் 131 போ் உயிரிழந்த நிலையில், 5,850 போ் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை 50 போ் மட்டும் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் சனிக்கிழமை 700 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது யாருக்கும் கரோனா அறிகுறி இல்லாத நிலை ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 750 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. ஆகவே மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையில் மொத்தம் 6,012 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...