தமிழக மீனவா்கள் எல்லைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினா் நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனா். இப்பகுதியில் தமிழக மீனவா்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால் தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் அடிக்கடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கின்றனா். அண்மையில் இலங்கைக் கடற்படையினா் தாக்கியதை விடியோ பதிவு செய்த ராமேசுவரம் மீனவா்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதனால் இலங்கைக் கடற்படையினருக்கு நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களை, இந்திய எல்லை தாண்டி இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரவேண்டாம் என நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் அந்நாட்டு கடற்படையினா் எச்சரித்தனா். இதனால் அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாத நிலையில், பாம்பன் மீனவா்கள் கரை திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


