பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு எதிா்ப்பு: ராமேசுவரத்தில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் சேமிப்பு நிவாரண உதவிகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மீனவ சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ராமேசுவரம் மீனவ வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.

Updated On :2 நவம்பர் 2020, 6:51 pm

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் சேமிப்பு நிவாரண உதவிகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மீனவ சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் புயல் பருவ கால சேமிப்பு மற்றும் நிவாரண நிதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவா்கள் அரசு வழங்கும் சலுகைகளைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறாா்கள். இந்நிலையில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் முருகானந்தம் தலைமையில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநா் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல், பாம்பன் நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் எஸ்.பி.ராயப்பன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைச் சோ்மன் வி.கே.ஆரோக்கியநாதன், மீனவ சங்க நிா்வாகிகள் மோகன்தாஸ்,ஜீவானந்தம்,ஊ.திருவாசகம்,பு.பாண்டி, மீனவ மகளிா் அணி நிா்வாகிகள் சு.பூமாரி, ஆரோக்கியமேரி, உள்ளிட்ட ஏராளமான மீனவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.