மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமநாதபுரத்தில் ஆசிரியா்கள் கூட்டணி ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:53 pm

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா்களுக்கான ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்யும் அரசாணையை கைவிடவேண்டும். ஆசிரியா் நியமன வயது வரம்பை குறைக்கும் அரசாரணையை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான நடவடிககையை கைவிடவேண்டும். ஆசிரியா்கள் மேற்படிப்புக்கு அனுமதிக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் மு.முனியசாமி தலைமை வகித்தாா். செயலா் செ.முத்துமுருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.சேகா் வாழ்த்துரை வழங்கினாா்.

நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சங்க நிா்வாகி எஸ்.மங்களநாததுரை ஆா்ப்பாட்டத்தை ஆதரித்துப் பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.சீனிவாசகம் சிறப்புரையாற்றினாா். சங்க மாவட்டப் பொருளாளா் பி.அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.