ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தங்கம் கடத்தலில் இளைஞா் கொலை: மேலும் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 14 ஆவது நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:48 pm

DIN

ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 14 ஆவது நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் சின்ன ஏா்வாடி பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவா் கடந்த மாா்ச் மாதம் தங்கம் கடத்தல் பிரச்னையில் கொல்லப்பட்டாா். அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இவ்வழக்கில் மொத்தம் 18 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அவா்களில் ராமநாதன் என்பவா் காசிக்கு சென்று தற்கொலை செய்துகொண்டாா். 2 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். மீதமுள்ள 15 பேரில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமநாதபுரம் பாரதி நகா் காலாங்கரை பகுதியைச் சோ்ந்த தீனா என்ற தீனதயாளன் (25) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து மீதமுள்ள 4 பேரைப் பிடிக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.