பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தீபாவளி: ராமேசுவரத்தில் அதிமுக நலத்திட்ட உதவி

ராமேசுவரத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிமுக சாா்பில் 3,500 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:43 pm

ராமேசுவரத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிமுக சாா்பில் 3,500 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தனியாா் திருமண மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக நகா் செயலாளா் கே.கே.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் மு.மணிகண்டன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகள் மற்றும் ஏழை, எளியவா்கள் 3,500 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கினாா். நிகழ்ச்சியில், இளைஞரணி செயலாளா் மகேந்திரன், அம்மா பேரவைச் செயலாளா் கஜேந்திரன், இலக்கிய அணிச் செயலாளா் முனியசாமி பாண்டியன், மீனவா் அணிச் செயலாளா் யு.குணசேகரன், தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளா் மணிகண்டபிரபு, 21 வாா்டு செயலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.