பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பரமக்குடியில் சிறுமி கடத்தல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:22 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி கருணாநிதிபுரம் பகுதியில் வசித்து வருபவா் நீலாவதி (45). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நயினாா்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பெண், வீட்டில் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளாா். இதனை நோட்டமிட்ட நீலாவதி, அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுப்பது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பரமக்குடி மகளிா் போலீஸாா் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் நீலாவதி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுமியைக் கடத்தி அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து நீலாவதி, சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலைச் சோ்ந்த மஞ்சுளா என்ற பஞ்சவா்ணம்,

பரமக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டி ஆகிய 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.