பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 9:16 am

பிரீமியம் டேப்லெட் பிரிவில் இடம்பிடிக்கும் நோக்கில், ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் 4-ஐ இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மாடல் டேப்லெட்டானது குறைவான மேம்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டிருந்தாலும், உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு போன்றவைகளுடன் தினந்தோறும் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் 4-இன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ. 59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக நினைவகம் மற்றும் உள்நினைவகங்களை விரும்புவோருக்கு ரூ. 64,999 விலையுள்ள 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் 4, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 செயலியால் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி உள்நினைவகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பேட் 4 டேப்லெட் மாடலானது இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமானது. கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான ஒன்பிளஸ் பேட் 3 மாடலுடன் ஒப்பிடும் போது, இது முன்னதாக அறிமுகமாகியிருக்கிறது.

இந்த டேப்லெட்டில் 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன்கூடிய 13,380 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த பேட்டரி திறன் மூலம், ஒன்பிளஸ் பேட் 4 பேட்டரி லைஃப் ஆனது ஒரு நாளுக்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 5,000 வரையிலான தள்ளுபடி விலையுடன் இந்த மொபைல் போனானது ஆரம்ப விலையிலிருந்து ரூ. 54,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ ஸ்டைலஸை எந்தக் கூடுதல் விலையுமின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த டேப்லெட் ஒன்பிளஸ் இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும், வரும் நாள்களில் அமேஸான், ஃபிளிப் கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட்டானது டூன் க்ளோ மற்றும் சேஜ் மிஸ்ட் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.

Summary

OnePlus Pad 4 has been launched in India with a focus on performance, featuring the Snapdragon 8 Elite Gen 5 chipset and a large 13.2-inch 3.4K display. The tablet also packs a massive battery and comes with launch offers that bring the effective price down.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.